நான் வாசித்த புத்தகம் – 2025 | போட்டி முடிவுகள்
தேர்வான கட்டுரைகள்
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் & கலைஞர்கள் சங்கம் நடத்திய “நான் வாசித்த புத்தகம் – 2025” என்ற புத்தக மதிப்புரை முயற்சி, குழந்தைகளிடையே வாசிப்பு ஆர்வத்தையும், சிந்தனைத் திறனையும் ஊக்குவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது. பெறப்பட்ட மதிப்புரைகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறார் எழுத்தாளர்கள் அடங்கிய தேர்வுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டன. இதில் பங்குபெற்ற குழந்தைகள் அனைவருக்கும் எமது வாழ்த்துகள்.

Our Blogs
Our Recent News & Blogs
-
நான் வாசித்த புத்தகம் – 2025 | பங்கேற்பிற்கான பாராட்டு
Read More: நான் வாசித்த புத்தகம் – 2025 | பங்கேற்பிற்கான பாராட்டுநான் வாசித்த புத்தகம் – 2025 | பங்கேற்பிற்கான பாராட்டு (Participation Appreciation) Wonderful effort, children! Keep reading, keep writing, and keep growing! பிரிவு : தமிழ் 8 –…
-
நான் வாசித்த புத்தகம் – 2025 | பாராட்டத்தக்க முயற்சி
Read More: நான் வாசித்த புத்தகம் – 2025 | பாராட்டத்தக்க முயற்சிநான் வாசித்த புத்தகம் – 2025 | பாராட்டத்தக்க முயற்சி / Appreciated Effort You all tried your best and showed so much creativity in reading and writing!…
-
நான் வாசித்த புத்தகம் – 2025 | தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தக விமர்சனம்
Read More: நான் வாசித்த புத்தகம் – 2025 | தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தக விமர்சனம்தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தக விமர்சனம் / Selected Book Reviews: தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தக விமர்சனங்களை எழுதிய அனைத்து குழந்தைகளுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் பிரிவு: தமிழ் | 8 – 12 வயதினர் பிரிவு:…

அமைப்பு என்பது கூட்டுக்கனவு!
அமைப்பு என்பது கூட்டுக்கனவு. கூடிக் கனவு காண்பது. அந்தக் கனவை நனவாக்குவதற்காக கூடிச் சிந்திப்பது. அப்படிச் சிந்தித்து அந்தக் கனவை இன்னும் அழகாக்கி, விரிவுபடுத்தி, ஆழமும் நுட்பமும் கூட்டி, சமூகத்தின் முன்னால் அந்தக் கனவின் நியாயங்களை, அந்தக் கனவை நனவாக்க வேண்டியதின் அவசியத்தை, அதனால் விளையப்போகும் நன்மைகளை முன்வைப்பது. அந்தக் கனவை நிறைவேற்றப் போராடுவது, கனவு நனவாகும்வரைப் போராடுவது, யாருக்காகக் கனவு கண்டோமா அவர்களுக்கு அதன் பலன்கள் கிடைக்கச் செய்வது.
எனவே தான் தனிமனிதர்களின் கனவை விட வலுவானதாக கூட்டுக்கனவு இருக்கிறது.
உதயசங்கர், தலைவர் தசிஎகச
சிறார் இலக்கியப்பணி இன்றைய சமூகத்தின் தேவை என்பதை உணர்தல் எங்களின் செயல்பாடுகளுக்கான அடித்தளமாக இருந்து வருகிறது.
– சாலை செல்வம், செயலாளர் தசிஎகச











எங்களைப் பற்றி
சங்கத்தின் நோக்கம்
குழந்தைகளின் முழுமையான ஆளுமை வளர்ச்சி சார்ந்தும், குறிப்பாகக் கலை, இலக்கிய மேம்பாடு சார்ந்தும் செயல்படுவதே தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முதன்மையான நோக்கம்.
சங்கத்தின் நோக்கம், செயல்திட்டம் மற்றும் விதிமுறைகள் குறித்து அறிந்துகொள்ள…
குழந்தைகளின் முழுமையான ஆளுமை வளர்ச்சி சார்ந்தும், குறிப்பாகக் கலை, இலக்கிய மேம்பாடு சார்ந்தும் செயல்படுவதே தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முதன்மையான நோக்கம்.
சங்கத்தின் நோக்கம், செயல்திட்டம் மற்றும் விதிமுறைகள் குறித்து அறிந்துகொள்ள…
எது சிறுவர் இலக்கியம், அதில் என்ன இருக்க வேண்டும், சிறுவர் இலக்கியத்தின் வரையறை எது, அறம் போதிக்கும் படைப்புகள் சிறுவர் இலக்கியம் ஆகுமா? போன்ற விவாதங்கள் அனைத்தும் பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நேரடியாக நடந்திருப்பது சிறுவர் இலக்கியத்தின் வளர்ச்சிப் பாதையையே காட்டுகிறது.

குழந்தைகளின் கற்பனைத்திறன் என்பது எல்லையற்றது. அந்த கற்பனைத் திறனை ஆக்கப்பூர்வமான சிந்தனைக்குக் கொண்டு செல்ல கலையும்- இலக்கியமும் குழந்தையைக் கொண்டாடும் விதமாகவும், அவர்களின் மொழியில் இருப்பதும் அவசியம். இதை நமது சங்கம் செய்யும். பெரும்பாலான குழந்தைகள் கைப்பேசியின் வழியே சமூக வலைத்தளங்களில் மூழ்கியுள்ளனர். அந்த ஊடகத்தையும் கையாளும் விதமாகச் சிறார் கலை இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்பு செய்ய வேண்டிய தேவையுள்ளது.

சிறார்களின் கலைகள் இலக்கியங்கள்,வாசிப்பு ஆகியவை குறித்து தற்போது நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அடுத்தத் தலைமுறையின் ஆகச் சிறந்த மாற்றத்திற்கு இவையெல்லாம் மட்டுமே சிறந்த கருவியாக இருக்கும். அவ்வகையில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இதனை ஒரு கூட்டு செயல்படாக செயல்படுத்தி, அடுத்தத் தலைமுறையின் வளர்ச்சியில் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்குவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள தமிழ் குழந்தைகளின் .. ஒப்பற்ற தோழனாக இந்த இணையதளம் விளங்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன். வாசிப்பின் மீது அளவற்ற காதல் கொண்ட இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான குழந்தைகள் .. இந்த இணையதளத்தை நோக்கி தேனீக்களைப் போல மொய்த்தெடுக்கட்டும் ..
வருங்காலத்தின் விஞ்ஞானிகளை .. தத்துவ ஆசான்களை கவிஞர்களை கதாசிரியர்களை .. இன்னும் இன்னும் கலைஞர்களை .. உருவாக்குகின்ற ஒப்பற்ற பாதையை இந்த இணையதளம் அமைத்து தரட்டும் ..
வாழ்த்துக்கள்!

வரலாற்றுத் தேவையை உணர்ந்த காரணத்தால், காலப்பொருத்தப்பாடு கருதி 2021 – ஆம் ஆண்டில் தமிழ்நாடு சிறுவர் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உருவாக்கப் பட்டது. அதன் தொடர்ச்சியாக இச்சங்கத்திற்கு இணையதளம் தொடங்கத் துறைசார் படைப்பாளிகள் இப்பொழுது முன்முயற்சி எடுத்து வருகின்றனர். சிறார் இலக்கிய வானில் புனைவுகளும், அல்புனைவுகளுமாக ஆற்ற வேண்டிய பணிகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்தச் சமகாலச் சவாலை எதிர்கொண்டு, சிறார் இலக்கிய இணையதளம் புதிய சிகரங்களை வென்றெடுக்க அனைவரும் வாழ்த்துவோம்.

பிற்போக்கு மூடத்தனங்களை வலிந்து குழந்தைகளின் மூளைக்குள் கொட்டிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், அவர்களிடம் இருந்து குழந்தைகளைக் காப்பது நமது கடமையாகிறது.
அந்த வகையில் கூடியிருக்கும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்திற்கு PKDK வலைக்காட்சியின் வாழ்த்தும் பேரன்பும்

“மொழி வளத்தையும் , சமகால சமூகத்தின் பன்முகத் தன்மையையும் குழந்தைகளுக்கு எடுத்துச்செல்ல பெரிதும் உதவுவது கதைகளும் , பாடல்களுமே . அதன் முக்கியத்துவத்தை பொதுவெளியில் கடத்திச் செல்ல , பெரும் அர்பணிப்புடன் இயங்கும் தமிழக சிறார் இலக்கிய கூட்டமைவுகள் மற்றும் சங்கங்களின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குறியது “

பொதுவாக சிறார் இலக்கியத்தில் இரண்டு அம்சங்கள் கூடுதலான கவனம் பெறாமலே போய்விடுகின்றன. ஒன்று மொழிபெயர்ப்பு. இரண்டாவது புனைவற்ற எழுத்து. மொழிபெயர்ப்பை பொறுத்ததவரையில் தமிழில் வரும்பொழுதும் போதுமான அளவு கவனம் பெறுவதில்லை, குறிப்பாக சிறார் இலக்கியத்தில். தமிழில் பெரும்பாலும் கதைகள்தாம் பேசப்படுகின்றன. புனைவற்ற எழுத்து பெருமளவில் பேசப்படுவது இல்லை.
இந்த இரண்டு அம்சங்களும் மாற்றத்தை காண வேண்டும்.

தணியாத ஆர்வத்தோடும் குழந்தைகள் மீது கொண்ட அன்போடும் இணையதளம் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இணையதளம், நிச்சயம் சிறார் இலக்கியத்துக்குப் பலம் சேர்க்கும். என் அன்பு வாழ்த்துகள்.

இலண்டன் தமிழ்க் குழந்தைகளின் கதைசொல்லும் நிகழ்வுகளை தோழர். பிரபு ராஜேந்திரன் நெறிப்படுத்துவதை நேரில் பார்ப்பது பரவசமான அனுபவம். அவர் முன்னெடுத்துத் தொகுத்த குழுந்தைகள் இலக்கியம் தொடர்பான கோட்பாட்டை வகுக்கும் தொகை நூல் தமிழுக்கு முன்னோடி முயற்சி. சிறார் எழுத்துக்கு தனியே சங்கம் அமைந்திருப்பதும் அதற்கு இணையதளம் அமைவதும் பெருமகிழ்ச்சி. மனமார்ந்த வாழ்த்துக்கள்

நாம் தாய் மொழியின் வளர்ச்சியை நேசிப்பவர்கள் என்றால் தமிழ்ச் சிறார் கலை இலக்கியத்தின் வளர்ச்சியை விரும்புகிறவர்களாகத் தான் இருப்போம். தமிழ் இலக்கியத்தின் பண்பாட்டிற்கும் செழுமைக்கும் அடிப்படையாக இருப்பது சிறார் கலை இலக்கியமே.

Z தலைமுறை, ஆல்பா தலைமுறை என வகைப்படுத்தப்படும் தற்கால குழந்தைகளின் அகவுலகத்தைக் கட்டமைப்பதில் தகவல் தொடர்பும் தொழில்நுட்பமும் பெரும்பங்கு வகிக்கின்றன. அவர்களுக்கு அன்றாடம் 34GB அளவுக்கு தரவுகள் வந்து சேர்வதாக ஆய்வொன்று கூறுகின்றது. எனில், நம் குழந்தைகளிடம் வந்துசேரும் தரவுகள் எத்தகையவையாக இருக்க வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்திச் செயல்பட வேண்டியுள்ளது. இந்நோக்கத்திற்கு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் இணையதளம் வலுசேர்க்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

குழந்தைகளுடன் நெருங்கிப் பழகும்போது நமக்கும் குழந்தை உள்ளம் உண்டாகிறது. நாமும் குழந்தையாகி வடுகிறோம், அப்போது நம் உள்ளத்தில் தோன்றும் பாடலே குழந்தைப் பாடலாக அமைகிறது.

பல கைகள் பல்வேறு முறை ஓசை எழுப்புவதைக் காட்டிலும், பல கைகள் ஒரே முறை எழுப்பும் ஒசைக்கு வலிமை அதிகம். அதே போல சிறார் இலக்கிய செயல்பாடுகள் தனித் தனியாக செய்வதைக் காட்டிலும், ஒரு அமைப்பாய் திரண்டு செய்யப்படும் போது அதற்கான பலன்கள் அதிகம். அத்தகைய நோக்கத்தைக் கொண்டு மீண்டும் துவங்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் சங்கம் அதன் நோக்கில் முன்னேறிச் செல்ல வாழ்த்துகள்!
குழந்தைகளின் எல்லையற்ற சிந்தனை வளர்ச்சிக்கு கலை, இலக்கியம் ஒரு ஆதாரம். நவீன சிறார் கலை இலக்கியம் தளைக்க, தமிழ்ச் சிறார் எழுத்தாளர், கலைஞர்கள் ஓர் அமைப்பாக இணைந்து சமூக அக்கரையோடு கலையாக்கப் பணிகளில் ஈடுபடக் கைகோர்த்துள்ளோம். கனவுகள் மெய்ப்படும்.

‘ வேண்டுமடா சொல்லின்பம் மந்திரம் போலே’ என்பார் மகாகவி பாரதி. குழந்தை இலக்கியத்தின் மொழி குழந்தைகளுக்கு இன்பம் தருவதாக அமைய வேண்டும்.

மிகவும் ஆழமாகத் திட்டமிட்டு, தமிழ்நாடு குழந்தைகள் எழுத்தாளர்கள் சங்கத்தைத் துவக்கினீர்கள். இப்போது அதற்கான இணைய தளத்தையும் தொடங்க இருக்கிறீர்கள். இப்படி சமூக நோக்குள்ள மனித இதயங்கள் இணைந்து இதனைத் துவக்குவது என்பது ஒரு வரலாற்று நிகழ்வு.

இன்றைய காட்சி ஊடக உலகம், குழந்தைகளை, குழந்தைகளின் இயல்புக் கற்பனையை, இயற்கையோடும் இணைந்த மக்களோடுமான உறவை, மொழியோடான தொடர்பை, குழந்தமையை மெல்ல, களவாடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் குழந்தைகளுக்காகப் பொறுப்புடன் எழுதுவதும், கலையாக்கங்கள் படைப்பதும், குழந்தைகளுடன் இணைந்து அவர்களுக்காகச் செயல்படுவதும் மிகவும் இன்றியமையாத பணிகள். தமிழ் நாட்டில் இப்பணிகளில் இணைந்து கொண்டு இவற்றைச் செழுமையாக்கும் களப்பணியில் தமிழ் நாடு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் செயல்பட்டு வருவது பெருமகிழ்வு தரும் ஒன்று
குழந்தைகள் தளங்களில் பணியாற்றும் பலரும் இணைந்து செயல்பட, தமிழ் நாடு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க இணைய தளம் பேருதவியாக, பெரும்பயனாக இருக்கும்.
வாழ்த்தி மகிழ்கிறோம்

குழந்தை இலக்கியத்தின் மொழி இயல்பாகவே எளிமை, இனிமை, தெளிவு ஆகிய முப்பண்புகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். பாடல் என்றால் பண்புகளின் வரிசை, இனிமை, எளிமை, தெளிவு என்று மாறும்.கதை என்றால் எளிமை, இனிமை, தெளிவு என்று மாறும். கட்டுரை என்றால் தெளிவு, எளிமை, இனிமை என்று மாறும்.

அழகியல் என்பது ஒவ்வொரு நபருக்கு மாறுபடும். அரசியல் என்பது ஒவ்வொரு குழுவுக்கும் மாறுபடும்… தேசியம் என்பது ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் மாறுபடும்… ஆனால், சக மனிதர் மீதான நேசம் மட்டும் எங்கு மாறாது. ஆனால், சக மனிதர் மீது நேசம் கொள்ள முடியாமல் தடுப்பவை எவை என்பதைச் சிறார்களோடு சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள் பகிர வேண்டியது மிக மிக அவசியம்.

குழந்தைகள் நகரம், மாநகரம், கிராமம் உள்ளிட்ட பல அடுக்குமுறைகளில், மாறுபட்ட வாழ்க்கைச் சூழல்களில் வளர்கிறார்கள். அச்சூழலுக்கு ஏற்ற படைப்புகள் நமக்குத் தேவை. குழந்தைகளை கேள்வி கேட்கத் தூண்டினாலே போதும். மேலும், தங்கள் உலகத்துக்கு அந்நியமானவற்றையும் அங்கீகரிக்க, சமமாக நடத்தும் குணத்தை வளர்த்தெடுக்கும் படைப்புகளை உருவாக்க வேண்டியது இக்காலத்தின் அவசியம்

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் காலத்தில் சிறப்பாக இயங்கியிருந்த “குழந்தை எழுத்தாளர் சங்கம்” போல் நாமும் இணைந்து செயல்பட வேண்டுமென்று தொடர்ந்து எழுத்தாளர் சுகுமாரன் அவர்கள் வலியுறுத்தினார்.
அவர் விதைத்த அந்தச் சங்கம் பற்றிய எண்ணத்திற்கு உயிர் தரும் முதல் முயற்சியாக, கருத்தரங்கைத் திட்டமிட்டு நடத்தினோம். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் ஜூன்,2021-இல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

தமிழில் கவனம் பெறாத ஒரு பரப்பாக சிறுவர் இலக்கியம் உள்ளது . ஆனால் இதன் முக்கியத்துவம் பெரிது! இந்த நிலையை மாற்ற இதுபோன்ற முயற்சிகளும் பணிகளும் பெரிதும் பயனுள்ளவை

குழந்தை கவிஞன் தன் பார்வையால் எதையும் பார்ப்பதில்லை குழந்தைகளுக்குரிய கண்களால் காண்கிறான்.
குழந்தைகளுக்காக பாடல் எழுதும் போது திரும்பத் திரும்ப வீட்டு மிருகங்கள், விளையாட்டுப் பொருட்கள், தாய், தந்தை போன்ற குடும்ப உறுப்பினர்கள் என்றே எழுதுகிறார்கள். குறிப்பிட்ட 30 40 பொருட்களைப் பற்றியேதான் எல்லா கவிஞர்களும் பாடல் இயற்றி இருப்பார்கள். புதிய கோணங்களில் பார்த்து, புதிய சந்தங்களில் அமைத்து எழுதத்தானா பொருட்களுக்குப் பஞ்சம் ? குழந்தையின் செயல்களை கவனித்தால் கற்பனைப் பெருகும்.

கிளைச் சங்கங்ளை வழி நடத்துதல், கிளைச் சங்கங்கள் மூலம் மாவட்டந்தோறும் நடைபெறும் செயல்பாடுகள் சமூக மாற்றத்திற்கானவையாக அமையும் என்ற நம்பிக்கையை அளித்து வருகின்றன.

படைப்பாளர்கள் இளையோர்க்கு எழுதும் யதார்த்தக் கதைகள் உண்மையான சமூகத்தைப் பிரதிபலிக்க வேண்டும். அவர்கள் வாழ்வில் அன்றாடம் எதிர்கொள்ளும் அடிப்படையான சமூகப் பிரச்சினையைப் பேச வேண்டியது, காலத்தின் கட்டாயம்.
நம் வருங்காலச் சமுதாயம் அறிவார்ந்த சமுதாயமாக மிளிர வேண்டுமானால், தமிழ்ச் சிறார் கலை இலக்கியம் செழிக்க வேண்டியது அவசியம்

சங்கம், மிக முக்கியமான பிரச்னைகளில் அரசின் கவனத்தைக் கோரியிருக்கிறது. பல இடங்களில் பயிலரங்குகளை நடத்திக் கொண்டிருக்கிறது. புதிய எழுத்தாளர்களை, உருவாக்கியிருக்கிறது. குழந்தைப் படைப்பாளிகளை உருவாக்கியிருக்கிறது. இன்னும் சமூகத்தில் குழந்தைகளின் நலன்களைப் பற்றி சிறு சலனத்தை ஏற்படுத்தும் பல்வேறு முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறது.
இவையெல்லாம் நாம் அமைப்பாகச் சேர்ந்ததால் நிகழ்ந்த மாற்றங்கள். தனிமனிதர்களின் முயற்சிகளை விட கூட்டு முயற்சி என்பது வலிமையானதென்பதை காலம் நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.

காலத்தின் தேவைக்கு ஏற்ற பணி. எமது சிறாருகளுக்கும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் செயற்பாடுகள் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
சங்கம் வளர்க. வாழ்த்துகள்

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது சிறப்பான முயற்சி. நவீன தளங்களிலும் இச்செயல்பாடு புதிய வெளிச்சம் பாய்ச்சும். சிறார் எழுத்தாளர்கள் குறித்தும் அவர்கள் படைப்புகள் குறித்தும் ஒருங்கிணைத்து ஆவணப்படுத்துவது மிக முக்கியமானது.
வாழ்த்துகள்.

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூப் பூத்திருக்கிறது; ஆயிரம் பூக்கள் மலர்ந்து சோலை ஆகட்டும் தமிழ்க் குழந்தை இலக்கிய உலகம்!
(தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்திற்கு ஆனந்த விகடனின் வாழ்த்துச் செய்தி)
கலை இலக்கியத் தளங்களில் உலகப்படைப்புகளோடு ஒப்பிட்டுக் கூற கவிதை, நாவல், நாடகம், ஓவியம், இசை என ஒவ்வொரு பிரிவிலும் தமிழில் இருந்து எடுத்துக்காட்ட படைப்புகள் இருப்பது போல சிறார் படைப்புகளில் இல்லை. குறிப்பாக அழ. வள்ளியப்பா காலத்துக்குப் பிறகு சிறார் இலக்கியம் வறண்டு கிடந்தது. இந்த வறண்ட பாலைவனத்தில் பசுஞ்சோலையாக அண்மையில் சிறார் இலக்கியம் துளிர்த்து வளருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு உற்ற உறுதுணையாக சங்கம் அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழில் சிறுவர் இலக்கியம் என்றால் அது நீதி நூல்கள் மட்டுமே என்ற எண்ணத்தைப் புறந்தள்ளி அறிவியல் கொண்டு சிறார்களை அணுகுவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்.

ஒரு நூற்றாண்டு காலக் குழந்தை இலக்கிய வரலாற்றில் நடந்துள்ள செயல்பாடுகள், வெளியான படைப்புகள், பத்திரிகைகள், செய்த சாதனைகள், சறுக்கல்கள், புரிதல்கள், புரிதலின்மைகள் -என இவை எல்லாவற்றையும் பற்றிக் மூன்றாண்டுகளாக நண்பர்கள் வட்டம் ஒன்று விவாதித்து வந்தது.
அதன் பரிணாம வளர்ச்சியாகக் குழந்தைகளின் நலன்களில் அக்கறை கொண்ட படைப்பாளிகள், களச் செயல்பாட்டாளர்கள், பதிப்பக நண்பர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் தொடர்ந்து மேற்கொண்ட கடும் முயற்சிகளின் பலனாகத் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் என்ற ஓர் அமைப்புத் தோன்றியுள்ளது.

இணையதளம் அறிமுகம் பற்றி அறிந்து மகிழ்ச்சி! இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்கு வாழ்த்துக்கள். கலை மற்றும் இலக்கியம் மூலம் குழந்தைகளை மேம்படுத்துவதற்கான தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது.
தொடர்ந்து வெற்றி பெற அன்பான வாழ்த்துகள்!

‘குழந்தைகள் மீது எந்தவிதமான வன்முறை நிகழ்த்தப்பட்டால், அதற்கு எதிராகவும் குழந்தைகளின் நலன் சார்ந்தும் சங்கத்தின் குரல் ஒலிக்கும். குழந்தைகளின் வாசிப்புத் திறனை அதிகரிப்பதோடு, அவர்களுக்கு எழுதத் தூண்டும் செயல்களை இச்சங்கம் முன்னெடுக்கும். எழுத்தாளர்கள் எழுதுவதற்கு உரிய களனையும் கல்வியில் கலை இலக்கியத்தின் பங்களிப்பை அதிகரிக்கவும் சங்கம் செயல்படும்’

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்திற்கான இணையதளம் தொடங்கியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
வருங்காலத் தலைவர்களான குழந்தைகளை மகிழ்விக்கவும் வழிநடத்தவும் அருமையான படைப்புகளை உருவாக்கும் அரும்பணியை மேற்கொண்ட சிறார் எழுத்தாளர்களும் கலைஞர்களும் இணையம் வழி இணைந்திருப்பது சிறப்பு.
சிறார்கள் அவர்களுக்கான இலக்கியங்களைப் படித்துப் பயன்பெற, மகிழ்ச்சி கொள்ள இந்த இணையம் நாளும் உற்ற துணை நிற்கும் . வாழ்த்துக்கள்!

குழந்தைகள் தங்கள் உலகத்தை எழுத்துப் படைப்புக்களின் வழி நமக்கு வழங்க இத்தகைய தளம் அவசியம். ஏராளமான திறமைகளும் கற்பனை வளமும் குழந்தைகளின் சிந்தனை அடுக்குகளில் பதிந்து கிடக்கின்றன. அவை வெளிவர இத்தகைய முயற்சிகள் நிச்சயம் பங்கெளிக்கும். நல்வாழ்த்துக்கள்.

சிறுவர்களின் சிந்தனையை மத்தாப்பு போல பூக்கவைப்பது அவர்களுக்கான நூல்கள். தமிழில் தொன்மையான பழம்பெரும் இலக்கியங்கள் இருந்தும், தற்போதைய சூழலுக்கான சிறுவர் நூல்கள் வெகு குறைவாகவே உள்ளன. இந்த இடைவெளியை நிரப்ப முயலும் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் மற்ற தமிழக சிறார் இலக்கிய கூட்டமைப்புகளுடன் இணைந்து மென்மேலும் வளர வாழ்த்துகள்.

குழந்தைகளின் உள்ளம் சொல்லின் நயத்திலும், பொருளின் சிறப்பிலும் ஈடுபடுவதில்லை. அவர்கள் மென்மையான ஒலிகளைத்தான் கவனிக்கிறார்கள். அவர்களின் மொழியே ஒலியின் தொகுதியாகத்தான் இருக்கிறது.

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கத்துக்கெனத் தனியாக வலைத்தளம் இல்லாத குறை தற்போது தீர்ந்துள்ளது!
நம் சங்கத்தின் செயல்பாடுகள் மட்டுமின்றி, நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியச் செயல்பாடுகளைப் பற்றியும் முழுமையாக அறிந்து கொள்ள, இந்தத் தளம் சிறந்த வரலாற்று ஆவணக்காப்பகமாக விளங்கும்.
இதைச் சிறப்பான முறையில் அருமையாக வடிவமைத்து உருவாக்கியுள்ள பொருளாளர் பஞ்சு மிட்டாய் பிரபுவுக்கு, இனிய வாழ்த்துகள்!

சிறார்களுக்கான எழுத்தாளர்கள், கலைஞர்கள் தனித்தனியாக செயல்பட்டு வந்தாலும், ‘தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்’ மூலமாக அனைவரும் ஒன்றிணைய தொடங்கினர். சிறார்களுக்கான செயல்பாடுகளில் காலத்துக்கு ஏற்ப என்னென்ன மாறுதல்கள் வேண்டும், புதிய விஷயங்கள் கொண்டு வர வேண்டும் என்று பல வழிகளில் இந்த ஒன்றிணைதல் உதவியாக இருந்து வருகிறது.

கண்டிப்பாக கொண்டாட வேண்டிய தருணம் இது 🌟 தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் .. இன்னொரு சாதனை கல் எட்டப்பட்டுள்ளது. நாம் நமக்கான இணைய தளம் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம் என்கிற செய்தி கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் .
நம்முடைய முன்னோடிகளான அழ வள்ளியப்பா .. டாக்டர் பூவண்ணன் .. வாண்டு மாமா ஆகியோர்களின் காலத்தில் இருந்த தகவல் தொடர்பு சாதனங்கள் வேறு. இன்றைக்கு நாம் iPod சந்ததிக்காக எழுதிக் கொண்டிருக்கிறோம். இந்த சூழலில் நமக்கான இணையதளம் என்பது பல்வேறு வகைகளில் நம்மை குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு கண்டிப்பாக பயன்படும்.

